செய்திகள்

காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்பு: ராகுல்காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற ராகுல்காந்திக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

நடிகர் கமல்ஹாசன் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்றுள்ளார். இதற்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

ராகுல்காந்திக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் இருக்கை வரையறுக்க கூடியது அல்ல. ஆனால் உங்கள் தகுதியை நீங்கள் வரையறுக்க முடியும்.

உங்கள் மூத்த தலைவர்களால் பெருமைப்படுகிறேன். நிச்சயம் அவர்களைப்போல் உங்களால் உழைக்க முடியும். அதற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான முழு பலமும் உங்கள் தோள்களுக்கு உண்டு.