செய்திகள்

கமல் முன்ஜாமீன் மனு மீது திங்களன்று தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை

நடிகர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது திங்களன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்குகிறது.

மாலை மலர்

சென்னை:

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் ஹாசன் பேசிய விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். வழக்கு விசாரணையின்போது கமல் ஹாசன் மீது 76 புகார்கள் அளிக்கப்படிருப்பதாக அரசு தெரிவித்திருந்தது. 

இந்த வழக்கில் நடிகர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை வரும் திங்களன்று தீர்ப்பு வழங்குகிறது.