மரணம் 
செய்திகள்

கழுகுமலையில் வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

கழுகுமலையில் வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள விநாயகர் காலனியை சேர்ந்தவர் குருநாதன் (வயது44). இவர் கூலி வேலை செய்து வந்தார். குருநாதனுக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை குமாரபுரத்தில் குருநாதன் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது மினிவேன் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் சம்பவ இடத்திலேயே குருநாதன் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த கழுகுமலை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து போலீசார் அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.