தொழிலாளி தற்கொலை 
செய்திகள்

கல்பாக்கம் அருகே வடமாநில தொழிலாளி தற்கொலை

கல்பாக்கம் அருகே வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கல்பாக்கம்:

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அகில்தாஸ் (வயது 36). இவர் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு இறால் பண்ணையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவரது குடும்பத்தினர் அசாமில் உள்ளனர். அகில்தாஸ் தனது மனைவியுடன் அடிக்கடி செல்போனில் பேசுவது வழக்கம். நேற்று முன்தினம் அவர் வழக்கம் போல மனைவியுடன் செல்போனில் பேசியுள்ளார், அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மனவேதனை அடைந்த அகில்தாஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.