செய்திகள்

கள்ளிக்குடி அருகே வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை - வாலிபர் கைது

கள்ளிக்குடி அருகே வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன். இவரது மனைவி கலைச்செல்வி.

சம்பவத்தன்று இவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ,1000-த்தை திருடிக் கொண்டு தப்பினார்.

இது குறித்து கலைச் செல்வி கொடுத்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கலைச் செல்வி வீட்டில் நகை, பணம் திருடியது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சண்முகக்கண்ணன் (வயது 27) என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.