கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அயன்சிங்கம் பட்டியில் புனித மிக்கேல் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுடலைமணி(வயது 13) என்ற மாணவன் 8-ம் வகுப்பும், மூர்த்தி(12) என்ற மாணவன் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தமிழக அரசின் அரசு விடுதியில் தங்கி பயின்று வந்த 2 மாணவர்களும் ஆதரவற்றவர்கள்.
இந்நிலையில் மாணவர்கள் இருவரும் நேற்று மாலை 3 மணிக்கு பள்ளி முடிந்ததும் மணிமுத்தாறு செல்லும் பேருந்தில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவரும் வெகுநேரமாகியும் விடுதிக்கு திரும்பவில்லை. இதனால் பள்ளி நிர்வாகம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தது.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சவரிமுத்து விசாரணை நடத்தி, மாயமான 2 மாணவர்களையும் தேடி வருகிறார்.