செய்திகள்

கள்ளப்பெரம்பூர் அருகே மதுபாட்டில்கள் விற்றவர் கைது

கள்ளப்பெரம்பூர் அருகே மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்துள்ள கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள தென்னங்குடியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கள்ளப்பெரம்பூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலிசார் தென்னங்குடி பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டனர்.

அப்போது தென்னங்குடியை சேர்ந்த சேகர் (வயது 46) என்பவர் தென்னங்குடி பேருந்து நிறுத்தம் அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே போலிசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலிசார் வழக்கு பதிவு செய்து சேகரை தைது செய்து அவரிடம் இருந்த 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT