மணல் கடத்தல் 
செய்திகள்

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகள் பறிமுதல்

கள்ளப்பெரம்பூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சையை அடுத்த வடகால் பகுதியில் கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் அபானா அஞ்சும் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெண்ணாற்றில் இருந்து 9 மாட்டு வண்டிகளில் மணலை ஏற்றி கொண்டு காமாட்சி தோட்டம் பகுதி அருகே சிலர் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் சாலையிலேயே மாட்டு வண்டிகளை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அனுமதியின்றி ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்ததுடன், தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT