லாரி தீ 
செய்திகள்

கலசபாக்கம் அருகே லாரியில் திடீர் தீ

கலசபாக்கம் அருகே நள்ளிரவில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை:

அரியலூரில் இருந்து சிமெண்டு ஏற்றிக்கொண்டு சித்தூர் நோக்கி ஒரு லாரி வந்தது. இதனை மணிகண்டன் என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலையை அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு மணிகண்டன் உணவு சாப்பிட்டு விட்டு இரவு அங்கேயே தூங்கினார்.

இந்த நிலையில் நள்ளிரவில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை அறிந்த டிரைவர் மணிகண்டன் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் லாரி முழுவதும் தீப்பிடித்து எரிந்து விட்டது. திருவண்ணாமலையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT