செய்திகள்

காக்கிநாடாவில் பெண் தொழிலதிபரை கடத்திய கார் டிரைவர்

காக்கிநாடாவில் காரில் கடத்தப்பட்ட பெண் தொழிலதிபரை கிராம மக்கள் மீட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகரி:

கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் வீரவெங்கட சத்யசாயி. தொழிலதிபர். இவரது மனைவி தனலட்சுமி. கணவரின் நிறுவனத்தில் முதன்மை அதிகாரியாக உள்ளார்.

இவரது கார் டிரைவர் விடுமுறையில் சென்றால் தற்காலிமாக டிரைவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் தனலட்சுமியை காரில் கம்பெனிக்கு வேறு பாதையில் அழைத்து சென்றார். வழியில் 2 வாலிபர்கள் காரில் ஏறி தனலட்சுமியை கடத்தி சென்றனர்.

ரூ.50 லட்சம் தராவிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர். தனலட்சுமியின் கூச்சலை கேட்ட வாலிபர் ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் மற்றும் கிராம மக்கள் காரை மடக்கி தனலட்சுமியை மீட்டனர். பிரகாஷ், பாபி என்ற 2 வாலிபர்கள் பிடிபட்டனர். கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை தேடி வருகிறார்கள்.