காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள பெரியவடகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் மணிபாரதி (வயது 22).
இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்த மணிபாரதி பின்னர் உறவினரை பார்க்க வேண்டி மோட்டார் சைக்கிளில் முனிசெட்டிபட்டி பகுதிக்கு சென்றார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மணிபாரதி மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதி மணிபாரதி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்தபோது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது.
இந்த விபத்து சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.