அரிவாள் வெட்டு 
செய்திகள்

கடையம் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

கடையம் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையம்:

கடையம் அருகே உள்ள புலவனூர் பொன்மலைநகரை சேர்ந்தவர் வைகுண்டம். இவர் வாரச்சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் மனைவி மகேஸ்வரி (45) என்பவர் 2 வாரங்களாக பணம் கட்டவில்லையாம். இதனை கேட்பதற்காக நேற்று மாலை அவரது வீட்டுக்கு வைகுண்டம் சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த வைகுண்டம், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மகேஸ்வரியை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர், தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காஜா முகைதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.