தற்கொலை 
செய்திகள்

கடத்தூர் அருகே வாலிபர் தற்கொலை

கடத்தூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கடத்தூர் அருகே உள்ள திண்டலானூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் கார்த்தி (வயது 20). இவர் சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.