செய்திகள்

அரசியல் ஞானோதயம் இல்லாதவர் கமல்ஹாசன்- கடம்பூர் ராஜூ தாக்கு

கமல்ஹாசன் அரசியல ஞானோதயம் இல்லாதவர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #kadamburraju #kamalhassan

மாலை மலர்

மதுரை:

சிவகாசியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் பாரதீய ஜனதா மீது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்குமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், கட்சியின் கொள்கைகளுக்கேற்ப முதல்வர், துணை முதல்வர் இதுபற்றி முடிவெடுப்பார்கள். அதனை கட்சியினர் ஏற்றுக் கொள்வார்கள் என்றார்.

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன், ஒவ்வொரு நபர் மீதும் ரூ.45 ஆயிரம் கடன் உள்ளதாக தெரிவித்துள்ளாரே என்று கேட்டபோது கமல்ஹாசனுக்கு அரசியல் ஞானோதயம் இல்லை. அவருக்கு எதுவும் தெரியாது. அவர் கூறியதை பொருட்படுத்த தேவையில்லை என்று கடம்பூர் ராஜூ கூறினார்.

மேலும் 6-வது முறையாக எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் வரியில்லாத பட்ஜெட் தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை பலரும் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதாகவும் இதனை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் ரூ. 27 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் மாணவர் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #tamilnews #kadamburraju #kamalhassan