மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த நேர்வில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்!
கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வர வேண்டும்! என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் போராட வேண்டிய அவசியமில்லை அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும். ‘‘ மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது, விரைவில் நல்ல தகவல் வரும்’’ எனத் தெரிவித்துள்ளார்.