கோப்புபடம் 
செய்திகள்

கபிஸ்தலம் அருகே மயங்கி விழுந்து தொழிலாளி பலி

கபிஸ்தலம் அருகே விவசாய வேலைக்கு சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கபிஸ்தலம்:

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள தேவன்குடி கிராமத்தில் வசிக்கும் குருசாமி மகன் முருகேசன் (வயது 50) விவசாயக் கூலி தொழிலாளி.

இவர் கடந்த 29-ந் தேதி விவசாய வேலைக்கு சென்று விட்டு வரும் பொழுது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக சிகிச்சைக்காக இவரை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வீட்டில் இருந்தவர்கள் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மனைவி சவுந்தரவள்ளி கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.