கபிஸ்தலம், ஏப்.29-
கபிஸ்தலம் அருகே உள்ள நரசிம்மபுரம் அம்பலகாரர் தெருவில் வசிப்பவர் ஆறுமுகம் (வயது 52). விவசாய கூலி. திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவருக்கும், அதே ஊரில் வசிக்கும் குமார் என்பவரும் இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. சம்பவத்தன்று ஆறுமுகம் நடந்து சென்றபோது அவரை வழிமறித்து குமார் மற்றும் அவரது உறவினர்கள் நரசிம்மபுரம் பாண்டியன், ஆதனூர் கலியமூர்த்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து குமார், பாண்டியன், கலியமூர்த்தி ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்.