விபத்து பலி 
செய்திகள்

கபிலர்மலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி

கபிலர்மலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் மந்தாரப்பட்டிகாடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவர் கபிலர்மலை அருகே சின்னசோளிபாளையத்தில் உள்ள ஒரு வெல்லம் தயாரிக்கும் ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 17-ந் தேதி மோட்டார்சைக்கிளில் கபிலர்மலைக்கு சென்று விட்டு மீண்டும் ஜேடர்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். செம்மடைபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வம் நேற்று இறந்தார். இந்த விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT