செய்திகள்

தமிழக அமைச்சர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவேண்டும்: கி.வீரமணி

ஜெயலலிதா மரணம் குறித்து மாறுபட்ட கருத்துக்களை கூறிவரும் தமிழக அமைச்சர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டுமென கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

திருச்சியில் நடைபெற்ற பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தி.க. தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அமைச்சர்கள் பலரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தகவல்களை கூறி வருகின்றனர். அவர்கள் அனைவரையும் உண்மை நிலை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த ஆளுநர் முன்வர வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ள இந்த அமைச்சரவை எவ்வளவு நாள் நீடிக்க வேண்டும் என ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களின் கேள்வியாக இருந்து வருகிறது.


விரைவில் நீட் தேர்வுக்கு எதிராகவும், அதனை ஒழிக்கும் வகையிலும் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.