உலகப்புகழ் பெற்ற பாப் இசைக்கலைஞர் ஜஸ்டின் பீபர் போட்டோகிராபர் ஒருவரை காரில் மோதிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
கனடாவைச் சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர், 22 வயதான இவர் சிறு வயது முதலே பாப் இசையில் கலக்கி வருகிறார். இவரது இசை ஆல்பங்கள் எல்லாமே ரசிகர்களின் அமோக ஆதரவால் மில்லியன் ஹிட்கள் அடித்து வருகின்றவை. மிகக் குறைந்த வயதிலேயே கிராமி விருது உள்பட பல விருதுகளை வென்றவர்.
தன்னுடைய திறமையினாலும், கடினமான உழைப்புகளாலும், சிறு வயதிலேயே உலகப்புகழ் பெற்ற ஜஸ்டின் பீபர், இளம் வயதிலேயே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். ஜஸ்டின் பீபர் தன்னுடைய சில முதிர்ச்சியற்ற நடவடிக்கைகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
குடித்துவிட்டு, முறையான லைசன்ஸ் இல்லாமல் தாறுமாறாக கார் ஓட்டுவது, மேடைகளில் ரசிகர்களுடன் அநாகரீகமாக நடந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு, ஜஸ்டினுக்கு சீனாவில் கச்சேரி நடத்த சமீபத்தில் அந்நாடு தடை விதித்திருந்து.