புதுடெல்லி:
முத்தலாக் நடைமுறைக்கு ஆறு மாதங்கள் இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் அமர்வு தீர்ப்பு அளித்தது.
மேலும், “மத்திய அரசு 6 மாதத்தில் அவரச சட்ட திருத்தம் கொண்டு வந்து முத்தலாக் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். அப்படி 6 மாதத்திற்குள் சட்டம் இயற்றவில்லையென்றால் முத்தலாக் மீதான தடை நீடிக்கும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், முத்தலாக் நடைமுறை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு இஸ்லாமிய பெண்களுக்கு சமத்துவத்தை வழங்குவதோடு, அவர்கள் அதிகாரம் பெறுவதற்காக சக்திவாய்ந்த நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்றுள்ள அமித் ஷா, சுய மரியாதையோடு வாழ வேண்டும் என்ற பெண்களுக்கு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என்றார்.