செய்திகள்

இடைத்தேர்தல் நடத்தி பணத்தை வீணடிப்பதை விட இப்படி செய்யலாமே? -நீதிபதிகள் கருத்து

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், இறந்தவரின் கட்சியை சேர்ந்தவருக்கு எம்.எல்.ஏ.பதவி வழங்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். #MadrasHCBench

திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக இறந்தவரின் கட்சியை சேர்ந்தவரை எம்.எல்.ஏ.வாக ஆக்கலாமே? என்று நீதிபதிகள் பரபரப்பு கருத்து தெரிவித்தனர்.