கோப்புப்படம் 
செய்திகள்

குஜராத் தனியார் நிறுவனத்தின் ரூ.8,100 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் இருந்து நீதிபதி விலகல்

குஜராத்தில் ஸ்டெர்லிங் பயோடெக் குழும நிறுவனத்தின் ரூ.8,100 கோடி வங்கி கடன் மோசடி வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

புதுடெல்லி:

குஜராத்தில் ஸ்டெர்லிங் பயோடெக் குழுமம் எனும் தனியார் நிறுவனம் ரூ.8,100 கோடி வங்கிக்கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்த வழக்கை, டெல்லி ஐகோர்ட்டு கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ராணா விசாரித்து வந்தார். இந்த நிலையில் அவர் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து தான் விலகுவதாக அறிவித்து உள்ளார்.

“இந்த வழக்கில் தன்னுடன் படித்த வகுப்பு தோழர் ஒருவர் குற்றவாளிகளுக்காக பரிந்துரை செய்து தன்னுடன் பேசியதால் அதிர்ச்சி அடைந்ததாகவும், துரதிர்ஷ்டவசமான இதுபோன்ற சம்பவங்கள் எனக்கு சங்கடம் தராமல் இருக்க இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாகவும்” அவர் கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT