செய்திகள்

எஸ்.வி சேகர் அநாகரீக கருத்து - பாஜக அலுவகத்தை முற்றுகையிட்டு பத்திரிகையாளர்கள் போராட்டம்

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தரக்குறைவாக பேசிய பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி சேகரை கண்டித்து சென்னையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

சென்னை:

நடிகரும் பா.ஜ.க நிர்வாகியுமான எஸ்.வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அநாகரீக கருத்து ஒன்றை பகிர்ந்திருந்தார். இதற்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தனது பதிவை நீக்கிய அவர் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், எஸ்.வி சேகரை கண்டித்து சென்னை பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட்ட பத்திரிக்கையாளர்கள் அவருக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பினர். பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #TamilNews

SCROLL FOR NEXT