தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 
செய்திகள்

பத்திரிகையாளர் ராஜன் மறைவுக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல்

மாலைத் தமிழகம் நாளிதழ் செய்தியாளர் ராஜன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாலைத் தமிழகம் நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் பி.ராஜன் (வயது 64) மாரடைப்பால் காலமானார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கோடைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜன்.  கிட்டத்தட்ட பத்திரிகை துறையில் 40 வருஷங்களுக்கு மேல் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு பணியாற்றி வந்த ராஜன் மாரடைப்பால் காலமானார்.  

நமது எம்ஜிஆர், மாலை தமிழகம், தமிழ் ஒளி போன்ற துறையில் பணியாற்றி சிறப்பு பெற்றவர் இவர்.  காகிதம் என்ற அமைப்பை நடத்தி வந்த இவர், நாளடைவில் காகிதம் ராஜன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.   பத்திரிகையாளர் பி.ராஜன் இறப்பு தமிழக பத்திரிகையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மறைந்த ராஜனுக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். அன்னாரது மறைவுக்கு பத்திரிகையாளர், அரசியல் கட்சியினர் பலரும் தங்களது அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.