பட்லர் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 50 பந்தில் 4 பவுண்டரி, 9 சிக்சருடன் 100 ரன்னை தொட்டார். பட்லர் 55 பந்தில் 110 ரன்னும் (6 பவுண்டரி, 9 சிக்சர்), ஜேசன் ராய் 87 ரன்னும், கேப்டன் மோர்கன் 48 பந்தில் 71 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 361 ரன் குவித்தது. இதனால் இங்கிலாந்து அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பகர் ஜமான் சதம் அடித்தும் பலன் இல்லாமல் போனது. அவர் 106 பந்தில் 138 ரன்னும் (12 பவுண்டரி, 4 சிக்சர்), ஆஷிப் அலி, பாபர் ஆசம் தலா 51 ரன்னும் எடுத்தனர்.
ப்ளங்கெட், டேவிட் வில்லே தலா 2 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், மொயீன் அலி, அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.