ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதற்கு அதிக தூரம் செல்ல வேண்டிய பகுதிகளில் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக கல்வி மந்திரி அல்டாஃப் புகாரி தெரிவித்தார்.
மாநிலத்தில் புதியதாக 16 கல்லூரிகளை தொடங்குவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும் 200 உயர் பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக மாற்றப்பட உள்ளது. அதே போல் தொடக்கப்பள்ளிகளில் பாதி உயர் பள்ளிகளாக மாற்றப்படும். இதனால் 12 கி.மீட்டருக்கும் மேலாக பயணம் செய்து படிக்கும் மாணவர்கள் வெகுவாக பயனடைவர். மாநிலத்தின் மிக முக்கிய பகுதிகளிலும் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கான திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்கும்.
அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணி பாராட்டுக்குறியது. இளைய தலைமுறையினரின் வளர்ச்சி ஆசிரியர்கள் கையில் உள்ளது. அதனால் தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களுக்கு சரியான சம்பளம் வழங்க வேண்டும். அப்போது தான் மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க முடியும் என அல்டாஃப் புகாரி கூறினார்.