ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எத்திபோன் என்ற மருந்து வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த மருந்தானது மனித ஆரோக்கியத்தை கெடுப்பதுடன், தாவரங்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும் என்று பரவலான குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, எத்திபோன் பூச்சிக்கொல்லி மருந்தின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஷேர்-இ-காஷ்மீர் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாநில தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியது. அதன்படி, பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், எத்திபோன் மருந்தினை பயன்படுத்துவதால் மனித ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கும் என்றும், தாவரங்களை பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எத்திபோன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி தோட்டக்கலைத்துறை செயலாளர் மாலிக் கூறுகையில், “எத்திபோன் மருந்தை தெளித்தால் பயிர்களின் தரமும் மோசமாகும். இதுதவிர, இந்த மருந்துகளை பயன்படுத்தி பழுக்க வைக்கும் பழங்களை நீண்டகாலம் சேமித்து வைக்க முடியாது. தொடர்ந்து இந்த மருந்தை பயன்படுத்தினால் மரங்களின் காய்ப்புத் தன்மை குறைவதுடன், அதன் ஆயுளும் குறைந்துவிடும்.