தென் கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங், ஐஸ் ஹாக்கி உள்பட பதினைந்து வகையான விளையாட்டு போட்டிகள் மற்றும் 102 கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இந்தியா உள்ளிட்ட 90 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.
இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நேரலையாக ஒளிபரப்புவதற்கான உரிமையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இருந்து வாங்கியுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ டிவி இன்று தெரிவித்துள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் சேர்ந்து இந்தியாவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளை நேரடியாக இனி ஜியோ டி.வி ஒளிபரப்பும். இதன்மூலம் செல்போனில் "ஜியோ டிவி" செயலியை பயன்படுத்தி போட்டிகளை காணலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.