செய்திகள்

பிரதமர் மோடிக்கு ஐ லவ் யூ சொன்னீங்களா? - ஜிக்னேஷ் மேவானி

பிரதமர் மோடிக்கு யாராவது ஐ லவ் யூ சொன்னீர்களா? என குஜராத்தை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ.வான ஜிக்னேஷ் மேவானி டுவிட்டரில் கேள்வி கேட்டுள்ளார். #JigneshMevani #Valentinesdaywishes

உலகம் முழுக்க காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பா.ஜ.க., ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தலம் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. காதலர் தினம் இந்திய கலாச்சாரத்தை கெடுக்கிறது என அவர்கள் கூறி சில இடங்களில் வன்முறையில் கூட ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், குஜராத்தை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ.வான ஜிக்னேஷ் மேவானி இதுகுறித்து ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் ''எனக்கு இன்று நிறையப் பேர் ஐ லவ் யூ சொன்னார்கள். ஆனால் யாராவது பாசமாக மோடிக்கு ஐ லவ் யூ சொன்னார்களா? என எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஹேப்பி வேலண்டைன்ஸ் டே'' என கூறியுள்ளார்.

அவரது டுவிட்டுக்கு பா.ஜ.க. ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலாக அவர்கள் காதலர் தினம் குறித்து மோசமாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதேபோல் ஜிக்னேஷ் மேவானியின் இந்தக் கருத்தையும் கலாய்த்து இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT