செய்திகள்

ஜெய்ப்பூர் ஏர்போர்ட்டில் ஜிக்னேஷ் மேவானி தடுத்து நிறுத்தம் - ஊடகங்களிடம் பேசவும் தடை

ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் நடக்க உள்ள அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வந்த ஜிக்னேஷ் மேவானியை ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடக்க உள்ளது. இந்த விழாவில் இந்திய அரசியல் சாசனம் குறித்து பேசுவதற்காக குஜராத் மாநிலம் வத்கம் தொகுதி எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் இன்று ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

கடந்த 2-ம் தேதி நடந்த பாரத் பந்தின் போது நாகவுர் நகரில் வன்முறை வெடித்தது. இதனால், அங்கு 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளதாக போலீசார் மேவானியிடம் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மேவானி கூறியுள்ளதாவது, “விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் சில போலீசார் வந்து நாகவுர் நகருக்குள் நுழைய உங்களுக்கு அனுமதி இல்லை என கூறினர். மேலும், என்னை அகமதாபாத்திற்கு திரும்பி செல்லுமாறு கட்டாயப்படுத்திகின்றனர். ஊடகங்களிடமும் பேச அனுமதி அளிக்கவில்லை” என பதிவிட்டுள்ளார். #TamilNews

SCROLL FOR NEXT