கொல்கத்தா:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மிகவும் சீனியர், 35 வயதாகும் ஜூலன் கோஸ்வாமி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ள அவர், மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீராங்கனைகளின் பட்டியலில் 200 விக்கெட்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். மிகச் சிறந்த ஆல்ரவுண்டரான அவருடைய இந்த சாதனையை கவுரவிக்கும் வகையில், சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அவரை வாழ்த்தினர். 2002ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட துவங்கிய அவர், 10 டெஸ்ட், 169 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்தாண்டு நடந்த மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி பைனல்ஸ் வரை முன்னேறியதற்கு ஜூலன் கோஸ்வாமி பெரிதும் உதவினார்.
2007ல் ஐசிசியின் சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதை வென்றுள்ள அவர், 2010ல் அர்ஜூனா விருதையும், 2012ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். #JhulanGoswami