செய்திகள்

நீச்சல் தெரியாமல் ஆற்றைக் கடக்க முயன்றவர் நீரில் மூழ்கி பலி - 50 ரூபாயால் நேர்ந்த பரிதாபம்

ஜார்க்கண்ட் மாநிலம் ரான்கார் மாவட்டத்தில் நீச்சல் தெரியாமல் நண்பரிடம் செய்த சவாலுக்காக ஆற்றைக் கடக்க முயன்றவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்


இதை ஏற்றுக்கொண்ட கவுதமும் அவருடைய நண்பர் ராமுவும் நீந்த தொடங்கினர். பாதியில் நீந்திக் கொண்டிருக்கும் போது இருவரும் மூழ்க தொடங்கினர். ராமு நீந்தி மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டார். ஆனால் கவுதம் மேலும் முன்னேறி சென்றார். திடீரென நீரின் வேகம் அதிகமானதால் அவரால் நீந்த முடியவில்லை. கவுதம் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


அங்கு இருந்த யாருக்கும் நீச்சல் தெரியாததால் கவுதமை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் கவுதம்  உடலை மீட்டனர்.

நீச்சல் தெரியாததால் ஆற்றிற்கு குளிக்க செல்ல வேண்டாம் என உறவினர்கள் கூறியும் அதை கேட்காமல் கவுதம் சென்றுள்ளார். அவருக்கு 5 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் அவரது மனைவி காச நோயால் பாதுக்கப்பட்டுள்ளார். வெறும் 50 ரூபாய் சவாலுக்காக உயிரை இழந்த கவுதமை நினைத்து அவர் உறவினர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர்.