கோவை:
கோவை கோவைபுதூர் செல்வம் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 50). ஆடிட்டர்.இவரது மனைவி லட்சுமி. இன்று காலை பாலசுப்பிரமணியன் வழக்கம்போல் அதே பகுதியில் உள்ள விசாலாட்சி நகரில் உள்ள அவரது அலுவலகத்துக்கு சென்றார். அதனைத்தொடர்ந்து அவரது மனைவி லட்சுமியும் காய்கறி கடைக்கு சென்றார்.
இன்று மதியம் 1 மணிக்கு லட்சுமி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் நகை திருட்டுபோயிருந்தது. இது குறித்து பாலசுப்பிரமணியன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவுடன் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.