திருச்சி:
திருச்சி குமரன்நகர் பேங்கர்ஸ் காலனி 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 63). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று இரவு வீட்டில் ஸ்ரீதர் மனைவி, மகனுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி உள்ளே குதித்தனர்.
பின்னர் இரும்பு கம்பியால் வீட்டின் முன்பக் ககதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துடன் ஸ்ரீதர் தூங்கி கொண்டு இருந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டினர்.
இதையடுத்து வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 6 பவுன் நகை, 3 ஆயிரம் ரொக்க பணம், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கேமிரா மற்றும் பூஜை பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். காலையில் எழுந்த ஸ்ரீதர் வீட்டில் கொள்ளை நடத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து ஸ்ரீதர் உறையூர் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ் பெக்டர் இளங் கோவன் வழக்குபதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்.