செய்திகள்

தருமபுரி அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை-பணம் பறிப்பு

தருமபுரி அருகே பட்டபகலில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வடக்கு தெரு கொட்டாவூரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் நேற்று காலை சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ராஜாவை வழிமறித்தார். அப்போது மர்ம நபர் ராஜாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 1 பவுன் நகை மற்றும் ரூ.370-யை பறிமுதல் செய்து அங்கிருந்து வண்டியில் வேகமாக தப்பி சென்று விட்டார். 

இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகமாக நடமாடும் சந்தை அருகே பட்டபகலில் வாலிபரை கத்தியைகாட்டி மிரட்டி மர்ம நபர் ஒருவர் துணிகரமாக  நகை, பணத்தை வழிப்பறி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.