நகைகள் கொள்ளை 
செய்திகள்

ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 67 பவுன் நகை கொள்ளை

ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 67 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர்:

ஓசூர் முனீஸ்வர் நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவர் ஓசூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்றதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 67 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து புகார் செய்யப்பட்டதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.