நகைகள் கொள்ளை 
செய்திகள்

ஓசூர் அருகே பூட்டிய வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளை

ஓசூர் அருகே பூட்டிய வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கலுகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பைரப்பா (வயது 55), தனியார் நிறுவன காவலாளி. இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT