திருமங்கலம்:
திருமங்கலம் அருகே உள்ள நாட்டார்மங்கலம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் பவுன்சாமி (வயது70). உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் தனது மனைவியுடன் செல்லம்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.
அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மறுநாள் ஊருக்கு திரும்பினார். அப்போது வீடடின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்தை மர்ம நபர்கள் சுருட்டிச் சென்றது தெரிய வந்தது.
இந்த துணிகர கொள்ளை குறித்து சிந்துபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.