புதுடெல்லி:
அமெரிக்காவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 2018 செரோக்கி எஸ்.யு.வி. மாடலை டெட்ராயிட் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய 2018 எஸ்.யு.வி. மாடலின் முன்பக்கம், சில மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலை.யில், இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரயிருக்கிறது.
தற்போதைய ஜீப் மாடல்களை போன்று புதிய மாடலின் முன்பக்கம் வளைவாக காட்சியளிக்கிறது. இத்துடன் ஏழு-அடக்கு கொண்ட கிறில், அழகிய ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டி.ஆர்.எல். உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. பின்புற ப்ரோஃபைலில் 2018 செரோக்கி பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை புதிய செரோக்கி மாடலில் 8.4 இன்ச் அல்லது 7.0 இன்ச் யு கணெக்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் குறிப்பிட்ட மாடலுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது.
2018 ஜீப் செரோக்கி மாடலில் 2.0-லிட்டர் 4-சிலிண்டர், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 266 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 400 என்.எம். டார்கியூ கொண்டிருக்கிறது. இத்துடன் 2.4 லிட்டர் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 178 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 3.2 லிட்டர் v6 இன்ஜின் 267 பி.ஹெச்.பி. பவர் வழங்கப்பட்டுள்ளது.
டிரான்ஸ்மிஷன் அம்சங்களை பொருத்த வரை புதிய ஜீப் செரோக்கி மாடலில் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மூன்று மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. புதிய எஸ்.யு.வி. மாடலில் 4-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ரியர்-டிரைவ் மாட்யூல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமசம் வாகனத்தை குறிப்பிட்ட சூழல்களில் முன்பக்க சக்கரத்தை இயக்க வழி செய்யும்.
புதிய 2018 செரோக்கி மாடலில் க்ரூஸ் கண்ட்ரோல், பார்க் அசிஸ்ட், ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங், லேண் டிபாச்சர் வார்னிங் உள்ளிட்ட 80க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐந்து வித ட்ரிம் மாடல்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.