செய்திகள்

மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஜெ.தீபா ஆலோசனை

எதிர்கால வளர்ச்சி பணிகள் குறித்து, புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஜெ.தீபா ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா கீழ்கண்ட தேதிகளில் கழகத்தின் எதிர்கால வளர்ச்சி பணிகள் குறித்து புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுடன் தினசரி மாலை 7 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

குறிப்பிட்ட தேதிகளில் மாவட்ட பொறுப்பாளர்கள் தவறாது தலைமை அலுவலகத்தில் கலந்து கொள்ள பொது செயலாளர் அனுமதியுடன் இச்செய்தி வெளியிடப்படுகிறது.

28-ந்தேதி- காஞ்சீபுரம் திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு.

29-ந்தேதி-விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, திருவண்ணாமலை தெற்கு.

30-ந்தேதி- கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, தஞ்சாவூர் தெற்கு, தஞ்சாவூர் வடக்கு.

ஜூலை 1-ந்தேதி- திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர்.

2-ந்தேதி-ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர்.

3-ந்தேதி- கோவை மாநகர், கோவை புறநகர்.

4-ந்தேதி-மதுரை மாநகர் மதுரை புறநகர்.

5-ந்தேதி - திருச்சி மாநகர், திருச்சி புறநகர்.

6-ந்தேதி-திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி மத்திய மாவட்டம், திருநெல் வேலி புறநகர்.

7-ந்தேதி- கன்னியா குமரி, நீலகிரி மாவட்டம்.

8-ந்தேதி- கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம்.

9-ந்தேதி-திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் கிழக்கு, பெரம்பலூர் மாவட்டம்.

10-ந்தேதி-நாகை வடக்கு, நாகை தெற்கு, தேனீ மாவட்டம்.

11-ந்தேதி- சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டம்.

12-ந்தேதி- தூத்துக்குடி, அரியலூர் மாவட்டம்.

13-ந்தேதி-சேலம் மாநகர், சேலம் புறநகர் கிழக்கு, சேலம் புறநகர் மேற்கு.

14-ந்தேதி-திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டம்.

15-ந்தேதி-கரூர், நாமக்கல் மாவட்டம்.