செய்திகள்

லாபம் பல மடங்கு உயர்ந்ததாக செய்தி: அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமித்ஷா மகன்

தனது நிறுவனத்தின் லாபம் பல மடங்கு உயர்ந்ததாக செய்தி வெளியிட்ட இணையதள ஆசிரியர் உள்ளிட்ட 7 பேர் மீது அமித்ஷா மகன் ஜெய்ஷா அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி:

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் மகனுக்கு சொந்தமான டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவே லிமிடெட் நிறுவனம் முந்தைய 2013-14-ம் நிதி ஆண்டில் 80 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்தது. ஆனால், 2015-16-ம் நிதி ஆண்டில் அந்த தொகையைவிட 16 ஆயிரம் மடங்கு லாபத்தை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது என தனியார் செய்தி இணையதள ஊடகம் ஒன்றில் செய்திகள் வெளியானது.

இவ்விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், இந்த செய்தியை மறுத்த பா.ஜ.க சம்பந்தப்பட்ட இணையதள ஆசிரியர் மற்றும் நிர்வாகி மீது 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என மத்திய மந்திரி பியுஷ் கோயல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அகமதாபாத் நீதிமன்றத்தில் இணையதள ஊடக ஆசிரியர், உரிமையாளர், கட்டுரையாளர் உள்ளிட்ட 7 பேர் மீது அமித்ஷா மகன் ஜெய்ஷா இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT