செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே மர்ம காய்ச்சலுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மர்ம காய்ச்சலுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலியானார்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 60). இவர் அரியலூர் அருகே உள்ள காரைகுறிச்சி பஞ்சாயத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார்.

இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் வந்தது. உடனே அவரை சிகிச்சைக்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணம் ஆகவில்லை. உடனே மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.