கோப்புப்படம் 
செய்திகள்

ஜெயலலிதாவின் புதிய சிலை நாளை திறப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை நாளை திறக்கப்படுகிறது. #ADMK #Jayalalithaa

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க.வின் தலைமையகம் அமைந்துள்ளது.  இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலையை இங்கு நிறுவுவது என அக்கட்சியால் முடிவு செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து புதிய சிலையை நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை நாளை திறக்கப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி புதிய சிலையை நாளை காலை 9.30 மணியளவில் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.  இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். #ADMK #Jayalalithaa

SCROLL FOR NEXT