சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது. அரசு அதிகாரிகள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என பலருக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது.
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா தங்கி சிகிச்சை பெற்ற அறையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் நிரஞ்சன், பார்த்தசாரதி ஆகியோர் நாளை காலை 10.30 மணிக்கு ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களுடன் சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியனும் உடன் இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா தங்கியிருந்த அறை மற்றும் அந்த அறை இருந்த மாடியிலும் அவர்கள் ஆய்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.