செய்திகள்

மறைந்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள்: சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

மறைந்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #Jayalalithaa

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் முன்னாள் பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறந்த நாளையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்படி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகளுக்கு முதல்வர் இனிப்பு வழங்கினார்.

SCROLL FOR NEXT