ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்கள் என முதலில் நிர்ணயிக்கப்பட்டது. 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.
ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாத காரணத்தால் ஆணையத்தின் காலம் முதலில் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் இரண்டு முறை தலா 4 மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி 2019, பிப்ரவரி 24ம் தேதிக்குள் விசாரணையை முடித்திருக்க வேண்டும். ஆனால், இந்த காலத்திற்குள் விசாரணை நிறைவடையவில்லை. எனவே, ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று, ஆணையத்தின் காலத்தை மேலும் 4 மாதத்திற்கு நீட்டித்து அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.