சென்னை:
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம், தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள கலசமகாலில் செயல்பட்டு வரும் அந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஜெயலிதாவின் உறவினர்கள், அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணை ஆணையத்தின் சம்மனை ஏற்று, தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளரும், முன்னாள் சிறப்பு ஆலோசகருமான ஷீலா பாலகிருஷ்ணன், கடந்த டிசம்பர் மாதம் 20-ந்தேதி நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, விளக்கத்தை பதிவு செய்துகொண்டார்.
இந்நிலையில் விசாரணை ஆணையம் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு தற்போது மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. அவரிடம் மேலும் விளக்கங்கள் பெற வேண்டியிருப்பதால், வரும் 11-ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.