செய்திகள்

முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் ஆஜராக ஜெ. மரண விசாரணை ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆணையம் முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன், ஜெயலலிதா சமையல்காரர் மற்றும் ஓட்டுநர் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. #JayaDeath

மாலை மலர்

சென்னை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்கள், ஜெயலலிதாவுடன் வசித்தவர்கள், அவரது உதவியாளர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியது. இன்று 3-வது முறையாக டாக்டர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார்.

முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், ஜெயலலிதா சமையல்காரர் ராஜம்மால், ஓட்டுநர் ஐயப்பன் ஆகியோருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. #JayaDeath #TamilNews