செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு - பாதுகாப்பு படைவீரர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் காயமடைந்தார். #JammuKashmir #MilitantsAttack

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

இதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒருவர் பலியானார் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். #JammuKashmir #MilitantsAttack